உலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’

உலகிலேயே மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’ என்பதாகும். இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘செகோயா நேஷனல் பார்க்’ என்ற பூங்காவில் அமைந்துள்ளது. இதன் வயது 2300 முதல் 2700 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த மரத்தின் உயரம் 83.8 மீட்டர்களாகும். விட்டம் 7.7 மீட்டர்களாகும். தோராயமாக 1,487 கன மீட்டர் அளவுடைய இந்த மரம் தான் தற்போது பூமியில் உள்ள மரங்களிலேயே மிகப்பெரியது.

அமெரிக்க உள்நாட்டு போரின்போது ராணுவ ஜெனரலாக பணிபுரிந்த ‘வில்லியம் ஷெர்மன்’ என்பவரின் நினைவாக இந்த மரம் பெயரிடப்பட்டது.

Share This: