த்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை

சீனா நாட்டின் ஹூபே மாகாணத்தில் உள்ள ‘த்ரீ கோர்ஜெஸ்’ என்ற அணைக்கட்டு, உலகின் மிகப்பெரிய அணைக்கட்டாக அறியப்படுகிறது. ‘யாங்சே’ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 22,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமுமாக உள்ளது.

1994ம் ஆண்டு இந்த அணை கட்டும் பணிகள் துவங்கி 2003ம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்த கட்டுமான பணிகளுக்கு 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவானது. இந்த இடங்களில் இதற்கு முன் வசித்த 1.3 மில்லியன் மக்களை இடம்பெயர செய்துவிட்டே இந்த அணையை கட்டியது சீனா அரசு.

இதன் நீளம் 2335 மீட்டர். ஆழம் 181 மீட்டர். இந்த அணையின் சிறப்பு என்னவெனில்… இதன் வழியாக கப்பல் செல்ல இயலும் என்பதே.

Share This: