ராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்

இன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி.

1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில் இயற்பியல் துறையில் Ph.D. பட்டம் பெற்றார்.

1939ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லரின் நாசி படைகள் ஆஸ்திரியா நாட்டை ஊடுருவியதால் வேறு வழியின்றி நாட்டை விட்டு வெளியேறினார். பல இடங்களில் முயன்று இறுதியாக அமெரிக்காவில் குடியேறினார்.

அமெரிக்காவை அடைந்தவுடன் ‘ஸினித் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன்’ ( Zenith Electronics Corporation ) என்ற நிறுவனத்தில் இணைந்தார். தனது வாழ்நாள் முழுவதும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார். 1982ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 58 கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்க காப்பீடு வைத்திருந்தார்.

1980 ஆம் ஆண்டு எடிசன் விருதினையும், 1997ஆம் ஆண்டு எம்மி விருதினையும் கொடுத்து அவரை கௌரவித்தனர்.

2007ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் தனது 93ஆம் வயதில் இருதய செயலிழப்பினால் உயிரிழந்தார்.

Share This: