கூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரம் ‘கூபர் பெடி’, நிலத்தடியில் வீடுகளை கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையும் நிலத்தடியில் இயங்குகின்றது. நவமணிகளில் ஒன்றான ‘கோமேதகம்’ ( Opal ) இங்கு கிடைப்பதால் அவற்றை பல சுரங்கங்கள் அமைத்து வெட்டி எடுக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். சுமார் 3500 மக்கள் வாழும் இந்நகரம் பெரும்பாலும் ஐரோப்பா கண்டத்திலிருந்து வந்து குடியேறியவர்களால் நிரம்பியது.

1915ஆம் ஆண்டு முதல் இங்கு ‘கோமேதகம்’ எடுக்கப்பட்டு உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 70 சுரங்களுக்கு மேல் இதற்காக அமைத்துள்ளனர். கோடை காலங்களில் 40 டிகிரி வெப்பநிலைக்கு மேல் செல்லும்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளை நிலத்தின் அடியிலேயே காட்டுகின்றனர். இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடிகிறது. தேவாலயங்கள், கடைகள், அருங்காட்சியகங்கள் என அனைத்தும் நிலத்தின் அடியில் கட்டி வைத்துள்ளனர். இதனால் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பல நிலத்தடி விடுதிகளும் இந்நகரில் இயங்குகின்றன.

Share This: