பி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்

இந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

சிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball ) வீரர்கள். சிந்துவின் தந்தை கரப்பந்தாட்ட விளையாட்டில் சிறந்து விளங்கியதால் ‘அர்ஜுனா’ விருதினை வென்றவர். பெற்றோர்கள் கரப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினாலும் சிந்துவுக்கு பூப்பந்தாட்டத்தில் தான் விருப்பம். தனது 8ம் வயது முதலே பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்.

முதலில் தெலுங்கானாவில் செக்கந்தராபாத் நகரில் உள்ள விளையாட்டரங்கில் முதற்கட்ட விளையாட்டு உக்திகளை கற்று தேர்ந்தார். பின்னர் ‘புல்லேலா கோபிசந்த் பூப்பந்தாட்ட அகாடமி’ யில் இணைந்து பயிற்சி பெற துவங்கினார். இதன் பின்னர் நாடெங்கும் நடக்கும் பல போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.

இவர் வென்ற சில பட்டங்கள்…

1) 2011ம் ஆண்டு – இந்தோனேசியா இன்டர்நேஷனல் பட்டம்
2) 2013ம் ஆண்டு – மலேஷியா மாஸ்டர்ஸ் பட்டம்
3) 2013ம் ஆண்டு – மக்காவு ஓப்பன் பட்டம்
4) 2014ம் ஆண்டு – மக்காவு ஓப்பன் பட்டம்
5) 2015ம் ஆண்டு – மக்காவு ஓப்பன் பட்டம்
6) 2016ம் ஆண்டு – மலேஷியா மாஸ்டர்ஸ் பட்டம்

2013ம் ஆண்டு ‘அர்ஜுனா’ விருதினை வென்ற இவருக்கு, 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதினை வழங்கி கவுரவித்தது அரசு.

Share This: