டேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்

தற்போதய பாகிஸ்தான் நாட்டில் உள்ள டேக்ஸிலா நகரில், 5ஆம் நூற்றாண்டில் அமைந்திருந்த பல்கலைக்கழகமே உலகின் முதல் பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது. முழுவதும் சேதமடைந்துவிட்ட அந்த பல்கலைக்கழக கட்டிடங்கள் தற்போது சுற்றுலா தளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

வரலாற்று பதிவுகளின் படி, 16 வயது முதல் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வி கற்றுக்கொள்ளலாம். அந்த காலத்தில் புகழ் பெற்று விளங்கிய புத்த மத கோட்பாடுகள் மற்றும் வேதங்களை பற்றியும் இங்கு கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த நகரம் பல காலகட்டங்களில் பல வம்சங்களால் தலை நகரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிக அளவில் புத்த மதத்தினை பின்பற்றுபவர்களும், ஹிந்துக்களும், கிரேக்க இனத்தவர்களும் பல நூற்றாண்டுகள் இங்கு வாழ்ந்தததற்கான சான்றுகள் உள்ளன.

இன்றைய பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்திற்குட்பட்ட ராவல்பிண்டி மாவட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது இந்த நகரம். ராவல்பிண்டி நகரில் இருந்து 35கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மேலும் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை காணவும்…

https://www.britannica.com/place/Taxila

Share This: